சென்னை ஐ ஐ டி வளாகத்தில் பள்ளியில் மரம் நடும் விழா - தாமூக அறக்கட்டளை
சென்னை I I T வளாகத்தில் இயங்கிவரும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் காந்தி ஜி -ன் நினைவு தினத்தை முன்னிட்டு தாமூக அறக்கட்டளை சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளியின் சார்பாக கேந்திரிய வித்யாலயா சங்கத்தான் -ன் தமிழ்நாடு மண்டல கமிஷ்னர் மற்றும் துணை கமிஷ்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு தொடங்கிவைத்தார்.
அவரைத் தொடர்ந்து பள்ளியின் முதல்வர் திரு.மாணிக்கசாமி மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு மாணவர்களிடையே பேசினார். பள்ளியில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. மரம் வளர்ப்பது என்பது நமக்கு அனைத்தையும் அளித்த இயற்கைக்கு நாம் செய்யும் சிறு கைமாறு என்றும், மரக்கன்றுகளை நடுவது மட்டுமன்றி அதை சரிவர பேணிப் பாதுகாப்பதும் நமது கடமையாகும் என்றார் அவர்.
காந்தி ஜி நினைவு தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மாணவர்களின் வயலின் இசை, நாட்டியம், நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தாமூக அறக்கட்டளை சார்பாக திரு. இங்கர்ஸால் பாண்டியன் , திரு. செல்வமணி அவர்கள் கூறும்போது, இம்மரக்கன்றுகள் வனப்பகுதிகளிலும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களிலும், சாலையோரங்களிலும், பூங்காக்களிலும், நடப்பட்டு பராமரித்து பாதுகாக்கப்படுகிறது என்றும் மேலும் கீழ் ஆலம், இலுப்பை, புன்னை, மந்தாரை, புங்கன்,மகிழம், பூவரசு, வேம்பு, மலை வேம்பு, நொச்சி, பவள மல்லி போன்ற பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது என்று அவர்கள் கூறினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தாமூக அறக்கட்டளை சார்பாக திரு. இங்கர்ஸால் பாண்டியன் , திரு. செல்வமணி , திரு. கமல் குமார் மற்றும் திரு.முருகப்பாண்டியன் அவர்கள் கலந்துகொண்டு இவ்விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.
Would you like to share your thoughts?
Your email address will not be published. Required fields are marked *

2 Comments